பாடல் - 5
ராகம் - ஸ்ரீ
தாளம் - ஆதி, திஸ்ர நடை
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன், என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இதுவென்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
பொருள்:
ஊழியின் பொழுது (பிரளய காலம்) கருமை நிறம் கொண்ட கடல் பொங்கி, உலகினை மூழ்கடித்த போது, இந்த பிரமாபுரத்தில் மேவிய இப்பெருமான், தோணியப்பராக இருந்து காத்தவர். அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்தலம் இந்த சீர்காழி. பெருமை வாய்ந்த இறைவன், தன் ஒரு பாகத்தில், உமையவளை கொண்டவர். சடை முடி தரித்தவர். விடையில் (காளைமாட்டின் மீது) ஊர்வலம் வருபவர். சிறப்பாக அமர்ந்து (மௌன நிலையில்), சனகாதி முனிகளுக்கு ஞான உபதேசம் செய்பவர். இவர் நம் யாவரின் உள்ளதையும் கவரும் கள்வர்.
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment