பாடல் - 6
ராகம் - நாட்டைக்குறிஞ்சி
தாளம் - ஆதி, திஸ்ர நடை
மறை கலந்த ஒலி, பாடலொடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
பொருள்:
வேத கோஷங்கள் மற்றும் பாடல்களுக்கு மகிழ்ந்து நடனம் ஆடுபவர் நம் பெருமான்.
தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை, தன் கையில் மகிழ்வோடு ஏந்தியவர் நம் இறைவன்.
தன் மீது பக்தி வைத்திருக்கும் அடியார்கள், இறைவனின் காட்சி கிடைக்காததால் சோர்ந்து, அந்த அடியார்களின் சங்கு வளையல்கள் கழன்று கீழே விழ வைக்கும் உள்ளம் கவர் கள்வன்.
இறைவன் மீது பற்று வைத்ததால் சம்சார சாகரத்தின் கறையினை கடக்கும் அடியார்கள் வாழும் ஊரும், நெடிய உயர்ந்த செடிகள் நிறைந்த சோலைகளில் பூக்கும் மலர்களால் வாசம் எங்கும் பரவும் ஊரும். பிறை அணிந்த பெருமான் மேவும் ஊரும் ஆகிய இந்த பிரமபுரத்தின் பெருமான் நம்தலைவனாகிய சிவபெருமானே.
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment