திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாக நம் மாநிலத்தில் அவதரித்தவர். அவர், சிவபெருமான் மீது எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார். 12 திருமுறை என்னும் தொகுப்பு, சிவபெருமான் மீது, அடியார்கள் பாடிய தலை சிறந்த பாடல்களின் தொகுப்பு. 12 திருமுறையில், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள், முதல் மூன்று திருமுறைகளில் வருகிறது.
சம்பந்தர், சீர்காழியில் அவதரித்தார். ஒரு நாள், சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்காக, சம்பந்தரின் தந்தை சென்றிருந்தார். சிறு குழந்தையான சம்பந்தரை, குளத்தின் அருகே விட்டுச்சென்றார். அவர் திரும்ப சிறிது நேரம் ஆனது. குழந்தைக்குப் பசி எடுத்ததால், அக்குழந்தை அழத்தொடங்கியது. உடனே, கருணாமூர்த்தியான எம்பெருமான் தோணியப்பர், தன் மனையாள் திரிபுரசுந்தரியை அனுப்பி, சம்பந்தனின் பசியைப் போக்குமாறு உத்தரவிட்டார். அன்னையோ, அண்ணலின் உத்தரவிற்காகவே காத்திருந்து, உத்தரவு வந்தபின், ஓடிச் சென்று, தன் முலைப்பாலினை சம்பந்தருக்கு கொடுத்து அருளினாள். பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தாள்.
பூஜை முடிந்து வந்த தந்தைக்கு ஆச்சர்யம் கலந்த பயம். குழந்தையின் வாயில் பால் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு தங்கக்கிண்ணம் கீழே இருந்தது. 'இது எப்படி நடந்தது? யார் பால் கொடுத்தார்கள்?" என்று வினவ, குழந்தை, ஆகாயத்தை காட்டியது. கோபத்தால், அடிக்க தந்தை தன் கையை உயர்த்த, பால் அருந்திய குழந்தை, பாலினும் இனிய பாக்களை பாடத் தொடங்கியது. தோடுடைய செவியன் என்று தொடங்கி, 10 பாடல்கள் + பலஸ்துதி பாடல் 1 மொத்தம் 11 பாடல்கள் ப்ரவாகமாக வந்தன.
தெய்வத்தின் அனுக்ரஹம் என்று சுற்றி உள்ள அனைவருக்கும் விளங்கியது.
சென்ற ஸ்தலத்தில் எல்லாம், 10 + 1 (11) பாடல்கள் கொண்ட தொகுப்பாக பாடினார். ஒவ்வொரு பதிகமும், ஒரு பலனை நல்கும். அதனால் அவை அனைத்தின் தொகுப்பும், திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்பட்டன.
சம்பந்தன் = சம் + பந்தன். சம் - நல்ல, பந்தன் - பந்தம் உடையவன். நல்ல விதமான பந்தம் உடையவர். நல்ல விதமான பந்தத்தை தருபவர். நல்ல பந்தம் என்றால், இறைவனோடு சேர்தல். பெயருக்கு ஏற்றாற்போல், இறைவனோடு அவரும் சேர்ந்தார். தன்னுடன் வந்தவர்களையும் இறைவனிடத்தே ஐக்கியம் அடைய செய்தார். தான் எழுதிய பாடல்களை பாராயணம் செய்வதால் இறைவனை அடையலாம் என்ற வழியை மக்களுக்கு காட்டினார். தனது திருமணம் முடிந்த பின்னர், தான், தன் மனைவி, அங்கு கூடி இருந்த உறவினர்கள் யாவரையும் சிவபெருமானின் சன்னிதி முன் தோன்றிய ஜோதியில் சேர்ப்பித்தார்.
இந்த வலைப்பதிவில் இனி, சம்பந்தரின் பாடல்களை படிக்கலாம், கேட்கலாம். சம்பந்தரின் ஞானம் கடல் போன்றது. அந்த கடலிலிருந்து என்னால் இயன்றவற்றை எடுத்து, உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆங்காங்கே தவறுகள் இருந்தால், தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். சரி செய்துக் கொள்கிறேன். ஒளவையார் கூறியது போல், கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு அல்லவா? இந்தப் பதிவினை எழுதும் வகையில், உங்களோடு சேர்ந்து நானும் கற்கிறேன்.
சம்பந்தர் மீதான குறிப்பு, ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி, மற்றும் அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி, ஆகியவற்றில் வந்துள்ளது. அதை பற்றி படிக்க, இங்கு அழுத்தவும்.
என்றும் இறைவன் அருளையும், உங்கள் அன்பையும் எதிர்நோக்கும்,
சரண்யா

தாளம் கிடைத்தது திருக்கோலக்கா தலத்தில். இயற்பெயர் சம்பந்தன் அல்ல. இயற்பெயர் என்னவென்று சேக்கிழார் பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. தென்திருமுல்லை வாயில் பதிகம் விளக்கம் உள்ளதா
ReplyDeleteThank you for the information.
DeleteHere is the link to thenthirumullaivaayil patigam
Deletehttp://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2088&padhi=122+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
copy the above link and paste in browser.
Deletetirumurai 2, song 88
Very useful tq
ReplyDeleteSuper
ReplyDeleteஅன்பரே,
ReplyDeleteதவறான தகவல் வேண்டாமே. வைகாசி மூலம் அவர் பிறந்த நட்சத்திரம் அல்ல.அவர் இறைவனோடு ஜோதியிற் புகுந்து கலந்தது தான் வைகாசி மூலம் ஆகும்.
Thank you for clarifying. Removed the same. Sorry for that.
DeleteSambanther yaruku nalgathi peruman yendru paratinar
ReplyDeleteநன்றி
ReplyDelete