ராகம்: புன்னாகவராளி
தாளம்: ஆதி, திஸ்ரநடை
அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே
பொருள்:
அந்தி - மாலை
மதி - நிலா
அரவம் - பாம்பு
சிவபெருமான் தலையில் அணிந்துள்ள மாலை நேர சந்திரன் (குளிர்ந்த சந்திரன் என்று பொருள் கொள்ளவேண்டும்), பாம்பு, சடை முடி ஆகியவை தாழ்ந்து சாயுமாறு, தாருகாவன முனிவர்கள், முன் ஒருமுறை, சிவபெருமான் மீது எய்த மான், தீ, முயலகன் என்னும் அரக்கன் (காட்டெரி) ஆகியவற்றை தன் கைகளில் ஏந்தினார்.
பெருமான், தன் ஒரு கையில் அனலினை ஏந்தினான். மறுகையில் மானினை வைத்துக்கொண்டான்.
ம்ருகதரன் என்று சிவபெருமானுக்கு ஒரு பெயர். ம்ருக - மான், தரன் - கையில் கொண்டவன்.
முயலகனை, தன் காலுக்கு கீழே தள்ளி, வலது காலை அவன் மீது ஊன்றி, அவன் வெளியே வரமுடியாமல் செய்தார். இடது காலை தூக்கி, நடனம் ஆடினார். தூக்கிய திருவடி என்பதால் குஞ்சிதபாதம் என்று பெயர் பெற்றார்.
இவ்வாறு, சிவபெருமானின் நாமங்களை சிந்தித்து தொழுபவர்களின் தீராத வினைகளை எல்லாம் பெருமான், எளிதில் தீர்த்து வைப்பார். *நந்தியும் அவரே. நல்லம் நகரின் நாயகன் நம்மை ஆள்வான்.
*திருமூலர் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று விநாயக பெருமானை போற்றிய துதியில், நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினை என்று பாடுகிறார். நந்தி மகன் என்பது சிவனின் மகன் என்று பொருள் படுகிறது.
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment