ராகம் - சஹானா
தாளம் - ரூபகம்
கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
பொருள்:
கூறுகொண்டாய் - இறைவன் தன் உடலின் ஒரு பாதியை உமையம்மைக்கு தந்தார்.
மூன்றும் ஒன்றாக் கூட்டி - விஷ்ணு, அக்னி,வாயு ஆகிய மூவரின் சக்திகளையும் ஒன்றாக திரட்டி
ஓர் வெங்கணையால் - அந்த சக்தியை ஒரு கூரிய அம்பாக மாற்றி
மாறு கொண்டார் - அசுரர். மாறுபட்ட கொள்கைகள் உடையவர்கள் ஆதலால் அசுரர்களை மாறுகொண்டார் என்று சம்பந்தர் கூறுகிறார். இறைவனை தலைவனாக ஒப்புக்கொண்டால், அது நேரான கொள்கை. இல்லையேல் அது மாறுபட்ட கொள்கை.
புரமெரித்த மன்னவனே - அசுரர்களின் ஊரான, திரிபுரத்தை எரித்த மன்னவன்.
கொடிமேல் ஏறு கொண்டாய் - இறைவனின் கொடி, ஏறு - ரிஷபம்.
சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே - எம்பெருமான் அணிந்த திருநீற்றை மணம் வீசும் சந்தனம் என்று கருதி தங்கள் நெற்றியில் அணியும் பக்தர்களின் இடர்களை களைவாய் நெடுங்களம் மேவும் இறைவனே!
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment