Tuesday, 19 January 2016

திருநெடுங்களம் - 9

ராகம் - கேதாரம்
தாளம் - ரூபகம்

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

வேழ வெண்கொம்பு - யானையின் வெள்ளை தந்தம்.
மால் - விஷ்ணு.
ஒசித்த - ஒடித்த.

மஹாவிஷ்ணு, கிருஷ்ண அவதாரத்தில், குவலயாபீடம் என்ற யானையோடு சண்டையிட்டு, அதனை கொன்று, அதன் தந்ததை உடைத்தார்.

விளங்கிய நான்முகன் - பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் கொண்ட பிரம்மா.

விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி காண எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவர்களால் முடியவில்லை. இறுதியில், அவர்கள் முன், நீண்ட ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் நின்றார். லிங்கோத்பவ மூர்த்தியின் தாத்பர்யம் இதுவே. ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி என்று மாணிக்கவாசகர், திருவெம்பாவையில் சிவபெருமானை பாடுகிறார்.

கேழல் - பன்றி. விஷ்ணு, வராஹ ரூபம் கொண்டு சிவனின் பாதத்தைக் காண முயற்சி செய்தார். காண முடியாததால், சிவன், தான் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக, அந்த வராஹத்தின், கொம்பு ஒன்றை உடைத்து, தான் அணிந்துக்கொண்டார்.

வராஹத்தின், கொம்பினை அணிந்த பெருமானின், கேடில்லாப் பொன்னடியின் (தீமை இல்லாத பொற்பாதங்கள்) நிழலில் வாழும் அடியார்களின் இடர்களை நீக்குவாய் என்று திருநெடுங்களப்பெருமானை வேண்டுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. மிக நன்றாக இருந்தது.நானும் அத்தையும் கேட்டு மகிழ்ந்தோம். நீ அருகில் இருப்பது போல் ஒரு பரவசம்.

    ReplyDelete
  2. மிக நன்றாக இருந்தது.நானும் அத்தையும் கேட்டு மகிழ்ந்தோம். நீ அருகில் இருப்பது போல் ஒரு பரவசம்.

    ReplyDelete