பாடல் 2
ராகம்: பேகடா
தாளம்: ரூபகம்
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
பொருள்:
கனைத்தெழுந்த - கனைத்து எழுந்த - சப்தம் செய்துக்கொண்டு எழுந்த
வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் - வெண்மையான அலைகள் என்னும் திரையினால் மூடப்பட்ட கடலிலிருந்து (திருப்பாற்கடல்) தோன்றிய நஞ்சினை உண்டு
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ - அந்த சிறிதளவு நஞ்சினை நின் தொண்டையில் நிறுத்திக்கொண்ட தேவனே,
நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே - உன்னை உள்ளத்துள் நினைத்து, இரவு பகலாக, ஆடி பாடி நினைத்து வழிபடும் அடியார்களின் துயரங்களை தீர்ப்பாய், நெடுங்களம் மேவும் இறைவனே!
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment