இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276-ல், சோழ நாட்டில், காவிரி தென்கரை ஸ்தலங்கள் 128-ல், 8-வது ஸ்தலம். திருச்சியிலிருந்து துவாக்குடி செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது.
இறைவன் நாமம் - நெடுங்களநாதர் (அ) நித்திய சுந்தரேஸ்வரர்
இறைவி நாமம் - ஒப்பில்லாநாயகி (அ) மங்களாம்பிகை
சம்பந்தர் பதிகம் பெயர்: இடர் களையும் பதிகம்
பாடல் 1
ராகம்: தேவகாந்தாரி
தாளம்: ரூபகம் (சதுஸ்ர ஜாதி)
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே
பொருள்:
மறை உடையாய் - வேதத்தினை உடைமையாய் உடையவன்
தோலுடையாய் - புலித்தோல், யானைத்தோல், மான்தோல் போன்ற தோல்களை ஆடையாய் உடுத்தவன்.
வார் சடை மேல் பிறை உடையாய் - சடையில், வளரும் பிறைச்சந்திரனை அணிந்தவன்.
பிஞ்ஞகனே - பெரியோனே
இவ்வாறு பெருமானை வாழ்த்தி வந்தால், நாம் குறைகள் பல செய்தாலும், நம்மையும் நாம் செய்த குறைகளையும் இறைவன் மன்னிப்பார்.
உயர்ந்த கொள்கைகள் உடைய அடியவர்கள் எப்போதும் இறைவனையே நினைப்பார்கள். நெடுங்களம் மேவும் இறைவன்அவர்களது இடர்களை நீக்கி அருள் புரிவார்.
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment